பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேக் & விஷ்ணு இடவன் | சத்ய நாராயணன் | ஜென் மார்ட்டின் | Bloody Beggar |
Ponmayame Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண் காண தேசத்து காரிருள் தேவதை…
யாரதை கண்களில் காட்டியதோ…
கை சேரும் தூரத்து பேரழகோவியம்…
யாரதை தூசியில் மாட்டியதோ…
ஆண் : கனவென்று தெரிந்திருந்தால்…
கண்களை திறக்கமாட்டேன்…
கனவே நீ கலைவதென்றால்…
நிஜத்தினை விரும்பமாட்டேன்…
ஆண் : உன் பொன் மாயமே என் கண்ணோடுதான்…
வாழ்நாளும் போனாலும் உன்னோடுதான்…
என் ஆகாயமே நம் மூச்சொடுதான்…
மண்ணோடு வந்தேனே உன்னோடு நாம் வாழவே…
கண்ணே…
—BGM—
ஆண் : உயிர் என்னில் நீ இருந்தால்…
உலகத்தில் நான் வசிப்பேன்…
உன் மடி சேர்வதே…
என் விதி என்று இருப்பேன்…
ஆண் : பிரிவென்ற நாள் இருந்தால்…
மண்ணுடன் மடிந்திடுவேன்…
உனக்கென்று பிறப்பதென்றால்…
இரப்பதும் இன்பமென்பேன்…
—BGM—
ஆண் : கண் காண தேசத்து காரிருள் தேவதை…
யாரதை கண்களில் காட்டியதோ…
கை சேரும் தூரத்து பேரழகோவியம்…
யாரதை தூசியில் மாட்டியதோ…
ஆண் : கனவேன்று தெரிந்திருந்தால்…
கண்களை திறக்கமாட்டேன்…
கனவே நீ கலைவதென்றால்…
நிஜத்தினை விரும்பமாட்டேன்…
குழு : பழகுமா விலகுமா வலி அது இளகுமா…
விழிகள் அழுது விழுமா மனமா ரணமா…
இருளுமா உருளுமா இருவரின் உலகமா…
நிலவில் சகதி விழுமா…
ஆண் : இதுவும் சுகம்தானா…
—BGM—
Notes : Ponmayame Song Lyrics in Tamil. This Song from Bloody Beggar (2024). Song Lyrics penned by Vivek & Vishnu Edavan. பொன் மாயமே பாடல் வரிகள்.
The post பொன் மாயமே appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/5Eh3XC2
0 Comments