பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | தீ | சந்தோஷ் நாராயணன் | வாழை |
Thenkizhakku Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தென்கிழக்கு தேன் சிட்டு…
செம்பருத்தி பூ மொட்டு…
செல்லம் கொஞ்சுதே தாலாட்ட…
—BGM—
பெண் : எத்தனையோ காலம் வாராத வானவில்…
வந்தது போல் நீ பேச…
உச்சியில நீந்தும் ஆகச மீனென…
துள்ளிடுதே உன் ஆசை…
பெண் : மழை அடிக்கும் உன் சிரிப்பில்…
செடி முளைக்கும் நான் பூவாக…
வெயில் அடிக்கும் நாள் வரைக்கும்…
குடை பிடிப்பேன் உன் தாயாக…
பெண் : நீ நீ சொல்லும் கதை…
நான் நான் கேட்கும் வர…
நாமாவோம் மாய பறவைகளே…
பெண் : தென்கிழக்கு தேன் சிட்டு…
செம்பருத்தி பூ மொட்டு…
செல்லம் கொஞ்சுதே தாலாட்ட…
—BGM—
பெண் : ஒத்தையில போகும் வெட்டவெளி மேகம்…
மெட்டெடுத்து பாடாதோ றெக்கை விரிச்சி…
சித்தெறும்பு போடும் நட்சத்திர கோலம்…
சொல்லடுத்து வீசாதோ உன்ன ரசிச்சு…
பெண் : தெரிஞ்சே நீ செய்யும் சேட்டை…
தெளிவாக உன்ன காட்ட…
அதில் கோடி ராகம் நானும் மீட்ட…
பெண் : தெருவெங்கும் தேர ஓட்ட…
மரமெல்லாம் ஊஞ்சல் ஆட்ட…
பெருகாதோ காலம் வேகம் கூட்ட…
பெண் : { பனங்கருக்கும் பால் சுரக்கும்…
அத நினைச்சே நீ கொண்டாடு…
பசி மறக்கும் நாள் பிறக்கும்…
வலி மறந்தே நீ கூத்தாடு… } * (4)
பெண் : { நீ நீ சொல்லும் கதை…
நான் நான் கேட்கும் வர…
நாமாவோம் மாய பறவைகளே… } * (2)
பெண் : பனங்கருக்கும் பால் சுரக்கும்…
அத நினைச்சே நீ கொண்டாடு…
பசி மறக்கும் நாள் பிறக்கும்…
வலி மறந்தே நீ கூத்தாடு…
Notes : Thenkizhakku Song Lyrics in Tamil. This Song from Vaazhai (2024). Song Lyrics penned by Yugabharathi. தென்கிழக்கு பாடல் வரிகள்.
The post தென்கிழக்கு appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/Rh1TBtn
0 Comments