சாலையோரம் சோலை ஒன்று https://ift.tt/pYJ8Lzm

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
வைரமுத்து எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி இளையராஜா பயணங்கள் முடிவதில்லை

Salaiyoram Solai Ondru Song Lyrics in Tamil


BGM

பெண் : சாலையோரம் சோலை ஒன்று ஆடும்…
சங்கீதம் பாடும்…
சாலையோரம் சோலை ஒன்று ஆடும்…
சங்கீதம் பாடும்…

பெண் : கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து…
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து…
சாலையோரம் சோலை ஒன்று ஆடும்…
சங்கீதம் பாடும்…

BGM

ஆண் : பாவை இவள் பார்த்து விட்டால்…
பாலைவனம் ஊற்றெடுக்கும்…

BGM

ஆண் : கண்ணிமைகள்தான் அசைந்தால்…
நந்தவனக் காற்றடிக்கும்…

பெண் : நீங்கள் என்னை பார்த்தால் குளிர் எடுக்கும்…
மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும்…

ஆண் : ஹேய்… பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்…
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்…

பெண் : மொட்டுக்கதவை பட்டு வண்டுகள் தட்டுகின்றதே இப்போது…

பெண் : சாலையோரம் சோலை ஒன்று ஆடும்…
சங்கீதம் பாடும்…

ஆண் : கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து…
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து…
சாலையோரம் சோலை ஒன்று ஆடும்…
சங்கீதம் பாடும்…

BGM

பெண் : கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க…

BGM

பெண் : அலை வந்து அழித்ததினால் கன்னி மனம்தான் துடிக்க…

ஆண் : கடலுக்கு கூட ஈரமில்லையோ…
நியாயங்களை கேட்க யாருமில்லையோ…

பெண் : சேர்த்து வைத்த தாகம்…
கண்ணால் இன்று கீறும்…
சேர்த்து வைத்த தாகம்…
கண்ணா இன்று கீறும்…

ஆண் : பேசும் கிள்ளையே ஈர முல்லையே…
நேரமில்லையே இப்போது…

ஆண் : சாலையோரம் சோலை ஒன்று ஆடும்…
சங்கீதம் பாடும்…

பெண் : கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து…
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து…

ஆண் & பெண் : தாராதாத்தா தாராதாத்தா தா தாரா ரா…


Notes : Salaiyoram Solai Ondru Song Lyrics in Tamil. This Song from Payanangal Mudivathillai (1982). Song Lyrics penned by Vairamuthu. சாலையோரம் சோலை ஒன்று பாடல் வரிகள்.


The post சாலையோரம் சோலை ஒன்று appeared first on Tamil Padal Varigal.from Tamil Padal Varigal https://ift.tt/LNFpAhv

Post a Comment

0 Comments