ஜீவன் நீயே https://ift.tt/A3YuEcU

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
விவேகா ஹரிசரண் & ஸ்ருதிகா சமுத்திரலா மணி சர்மா மார்ட்டின்

Jeevan Neeye Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏதோ சொல்ல தோன்றுதே உன்னோடு…
ஆண் : ஏழு வண்ண வானவில் கண்ணோடு…

பெண் : எதிரிலே நீ வர இன்பமே கூடுதே…
ஆண் : இதயத்தின் வாசலில் தென்றலாய் வீசுதே…

பெண் : இதே நேசம் இதே வாசம் என்றும் வேண்டுமே…

ஆண் : ஜீவன் நீயே ஜீவன் நீயே…
ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ…

பெண் : ஜீவன் நீயே ஜீவன் நீயே…
என் உயிர் உந்தன் தஞ்சமோ…

பெண் : ஏதோ சொல்ல தோன்றுதே உன்னோடு…
ஆண் : ஏழு வண்ண வானவில் கண்ணோடு…

BGM

பெண் : ஆண் மலரென்றால் நீதானடா…
ஆண் : நீ சிரித்த நொடிகளே மழைதானடி…

பெண் : எந்த கடவுள் தந்த வரமோ…
நீ என்னை சேர்ந்தது…

ஆண் : என்னை இந்த உலகில் படைத்ததே…
காதலில் விழுந்து உருகவா…

பெண் : சிறு கண்ணாடி நான் உன் பிம்பமே…
எந்நாளும் ஏந்தி வாழ்வேன்…

ஆண் : அடி ஆகாயமே உன் மீதிலே…
வெண்மேகம் ஆகி சாய்வேன்…

ஆண் : ஜீவன் நீயே ஜீவன் நீயே…
ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ…

பெண் : ஜீவன் நீயே ஜீவன் நீயே…
என் உயிர் உந்தன் தஞ்சமோ…

BGM

பெண் : நீ பார்த்ததும் உயிர் தாவுதோ…
ஆண் : என் கடலின் அலையெல்லாம் உன்னை தேடுதோ…

பெண் : உன்னை நினைத்து உறங்க சென்றால்…
இமைகளும் மறுக்குதே…

ஆண் : கருவறை குழந்தை போலவே…
காதலில் நானே வாழ்கிறேன்…

பெண் : அட என் ஆயுளே உன் கையிலே…
நீ மட்டும் போதும் அன்பே…

ஆண் : அடி மண்மூடிடும் அந்நாளிலும்…
உன் வாசம் தேடும் நெஞ்சே…

ஆண் : ஜீவன் நீயே ஜீவன் நீயே…
ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ…

பெண் : ஜீவன் நீயே ஜீவன் நீயே…
என் உயிர் உந்தன் தஞ்சமோ…


Notes : Jeevan Neeye Song Lyrics in Tamil. This Song from Martin (2024). Song Lyrics penned by Viveka. ஜீவன் நீயே பாடல் வரிகள்.


The post ஜீவன் நீயே appeared first on Tamil Padal Varigal.



from Tamil Padal Varigal https://ift.tt/SDhnZ3j

Post a Comment

0 Comments