பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | உன் கண்ணில் நீர் வழிந்தால் |
Kannil Enna Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…
மனமே நினைவே மறந்துவிடு…
துணை நான் அழகே துயரம்விடு…
ஆண் : விழியில் விழும் துளி…
என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே…
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா…
நியாயமா பெண்ணே… ஓ…
ஆண் : கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…
—BGM—
பெண் : நானே உன் சுமையாக ஏன் வந்தேன்…
சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்…
நான் உறங்கும் நாள் வேண்டும்…
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்…
பெண் : நான் உறங்கும் நாள் வேண்டும்…
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்…
என் கண்ணில் நீர் வேண்டும்…
சுகமாக அழ வேண்டும்…
ஆண் : கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…
—BGM—
பெண் : இருள் மூடும் கடலோடு நானிங்கே…
என் தோணி கரை சேரும் நாளெங்கே…
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்…
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்…
நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்…
ஆண் : கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…
மனமே நினைவே மறந்துவிடு…
துணை நான் அழகே துயரம்விடு…
ஆண் : விழியில் விழும் துளி…
என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே…
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா…
நியாயமா பெண்ணே… ஓ…
ஆண் : கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…
Notes : Kannil Enna Song Lyrics in Tamil. This Song from Un Kannil Neer Vazhindal (1985). Song Lyrics penned by Vairamuthu. கண்ணில் என்ன கார்காலம் பாடல் வரிகள்.
The post கண்ணில் என்ன கார்காலம் appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/ByIDlh6
0 Comments