பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | ஜி. வி. பிரகாஷ் குமார் | ஜி. வி. பிரகாஷ் குமார் | ஜப்பான் |
Anbile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அன்னையே தொடங்கும் இடம்…
அன்புதான் முடியும் இடம்…
வந்ததும் அழுத மனம்…
சென்றுதான் அமைதி பெறும்…
ஆண் : கருவில் சுமந்த அவளின் பாரம்…
இறக்கி வைக்க இதுவே நேரம்…
சரியும் தவறும் கடந்து போகும்…
எரியும் உலகில் எதுதான் மீதம்…
அத்தனைக்கும் பெரிதன்றோ அன்னையவள் பாதம்…
ஆண் : தந்தானே தானனனே…
தந்தானே தானனனே…
—BGM—
ஆண் : அன்னை அவள் உதிரத்திலே தோன்றுகின்ற உடல்களெல்லாம்…
வந்த வழி மறந்து விட்டு துடிப்பது என்ன…
பாவம் எனும் ஒரு கரையில் நீந்துகின்ற உயிர்களெல்லாம்…
ஞானம் எனும் மறு கரையில் சேர்வது என்ன…
ஆண் : நெஞ்சிலே துறவு கொண்டால் நீ நிம்மதி தேடி வரும்…
உண்மையது தெரிந்துவிட்டால் உன் உள்ளமே போதிமரம்…
ஆண் : தெருக்களிலே ஒருநாள் தெய்வம் சிரிக்கும்…
ஆண் : தந்தனே தானனனே… தந்தனே தானனனே…
—BGM—
ஆண் : நல்லதென நினைப்பதெல்லாம் அப்படியே இருப்பதில்லை…
கெட்டெதென ஒதுக்கியவை மறப்பது இல்லை…
கார் கொடுத்த முடியிருந்தும் பேச ஒரு வார்த்தையில்லை…
மூடிவிட்ட வார்த்தை எல்லாம் போவது இல்லை…
ஆண் : உள்ளமே பழுதடைந்தால் தூங்கிடவும் முடிவது இல்லை…
நாடி நின்ற உடல் மறையும் நற்கருணை அழிவது இல்லை…
ஆண் : அத்தனைக்கும் பெரிதன்றோ அன்னையவள் பாதம்…
அன்பினால் மனித குலம்…
கண்டதே கடவுள் முகம்…
தண்ணீரில் உடைந்த உள்ளம்…
முள்ளிலே மலர்ந்து விடும்…
ஆண் : இருட்டில்தானே ஒளியும் இருக்கும்…
அழுக்கில் கூட புனிதம் பிறக்கும்…
வாழ்க்கை என்றால் நாலும் நடக்கும்…
வலிந்திடாமல் எதுதான் கிடைக்கும்…
ஆண் : தெருக்களிலே ஒருநாள் தெய்வம் சிரிக்கும்…
ஆண் : தந்தனே தானனனே… தந்தனே தானனனே…
Notes : Anbile Song Lyrics in Tamil. This Song from Japan (2023). Song Lyrics penned by Yugabharathi. அன்பிலே பாடல் வரிகள்.
The post அன்பிலே appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/apN2rdW
0 Comments