பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | திருமதி பழனிச்சாமி |
Paatha Kolusu Song Lyrics in Tamil
ஆண் : பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்…
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்…
—BGM—
ஆண் : பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்…
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்…
—BGM—
ஆண் : பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்…
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்…
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு…
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு…
செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலைதான்…
ஆண் : பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்…
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்…
—BGM—
ஆண் : குத்தால மேகமெல்லாம் கூந்தலிலே நீந்தி வரும்…
கொய்யாத மாங்கனியை கொடியிடைதான் ஏந்தி வரும்…
மத்தாப்பு வானமெல்லாம் வாய்ச் சிரிப்பு காட்டி வரும்…
மானோடு மீன் இரண்டை மை விழியோ கூட்டி வரும்…
ஆண் : பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு…
ஒண்ணாகக் கலந்த முன்னூறு நிலவு…
பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில்தான்…
ஆண் : பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்…
—BGM—
ஆண் : செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டி வைத்த சித்திரமே…
தென்பாண்டிக் கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமே…
தொட்டாலும் கை மணக்கும் தென்பழனிச் சந்தனமே…
தென்காசித் தூரலிலே கண் விழித்த செண்பகமே…
ஆண் : பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ…
ஈரேழு உலகில் ஈடாக யாரோ…
நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ…
ஆண் : பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்…
—BGM—
ஆண் : பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி…
பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி…
கல்யாணப் பந்தலிலே நான் அவளை நேர் நிறுத்தி…
பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி…
ஆண் : அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி…
கண்டேனே எனக்கு தோதான ஜோடி…
வந்தாச்சு கால நேரம் மாலையிடத்தான்…
ஆண் : பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்…
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்…
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு…
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு…
செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலை தான்…
ஆண் : பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்…
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்…
Notes : Paatha Kolusu Song Lyrics in Tamil. This Song from Thirumathi Palanisamy (1992). Song Lyrics penned by Vaali. பாத கொலுசு பாட்டு பாடல் வரிகள்.
The post பாத கொலுசு பாட்டு appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/XvFA3tp
0 Comments