நீ எங்கே என் அன்பே https://ift.tt/MLIzVCK

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
வாலி சுவர்ணலதா இளையராஜா சின்ன தம்பி

Nee Engey En Anbe Song Lyrics in Tamil


பெண் : நீ எங்கே என் அன்பே…
மீண்டும் மீண்டும் மீண்டும்…
நீதான் இங்கு வேண்டும்…

பெண் : நீ எங்கே என் அன்பே…
நீ இன்றி நான் எங்கே…
மீண்டும் மீண்டும் மீண்டும்…
நீதான் இங்கு வேண்டும்…

பெண் : உந்தன் அன்பு இல்லாது…
எந்தன் ஜீவன் நில்லாது…
நீ எங்கே என் அன்பே…
நீ இன்றி நான் எங்கே…

BGM

பெண் : விடிகிற வரையினில் கதைகளைப் படித்ததை…
நினைத்ததே நினைத்ததே…
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம் இங்கு…
துடிக்குதே துடிக்குதே…

பெண் : கதையிலே கனவிலே உறவுகள் உணர்வுகள்…
உருகுதே உருகுதே…
பிழை இல்லை வழி இல்லை அருவிகள் விழிகளில்…
பெருகுதே பெருகுதே…

பெண் : வாழும் போது ஒன்றாக வாழ வேண்டும் வா வா…
விடியும் போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வா வா…
உந்தன் அன்பு இல்லாது…
எந்தன் ஜீவன் நில்லாது…

பெண் : நீ எங்கே என் அன்பே…
நீ இன்றி நான் எங்கே…
மீண்டும் மீண்டும் மீண்டும்…
நீதான் இங்கு வேண்டும்…

பெண் : உந்தன் அன்பு இல்லாது…
எந்தன் ஜீவன் நில்லாது…
நீ எங்கே என் அன்பே…
நீ இன்றி நான் எங்கே…

பெண் : நீ எங்கே என் அன்பே…
நீ இன்றி நான் எங்கே…

BGM

பெண் : வீதி என்றும் வெட்ட வெளி பொத்தலென்றும்…
வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா…
வீடு என்றும் மொட்டை சுடுக்காடு என்றும்…
தென்றல் இங்கு பார்க்குமா பார்க்குமா…

பெண் : எத்தனென்றும் ஏழை பணக்காரன் என்றும்…
ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா…
பித்தன் என்றும் பிச்சை போடும் பக்தன் என்றும்…
உண்மை தெய்வம் பார்க்குமா பார்க்குமா…

பெண் : காதல் கொண்டு வாழாத…
கதைகள் என்றென்றும் உண்டு…
கதைகள் இங்கு முடியாது…
மீண்டும் தொடரட்டும் இங்கு…

பெண் : உந்தன் அன்பு இல்லாது…
எந்தன் ஜீவன் நில்லாது…

பெண் : நீ எங்கே என் அன்பே…
நீ இன்றி நான் எங்கே…
மீண்டும் மீண்டும் மீண்டும்…
நீதான் இங்கு வேண்டும்…

பெண் : உந்தன் அன்பு இல்லாது…
எந்தன் ஜீவன் நில்லாது…
நீ எங்கே என் அன்பே…
நீ இன்றி நான் எங்கே…


Notes : Nee Engey En Anbe Song Lyrics in Tamil. This Song from Chinna Thambi (1991). Song Lyrics penned by Vaali. நீ எங்கே என் அன்பே பாடல் வரிகள்.


The post நீ எங்கே என் அன்பே appeared first on Tamil Padal Varigal.



from Tamil Padal Varigal https://ift.tt/WFywvzi

Post a Comment

0 Comments