பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
காளிதாசன் | பி. உன்னிகிருஷ்ணன் | எஸ். ஏ. ராஜ்குமார் | பிஸ்தா |
Saranam Ayyappa Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பால் அபிஷேகம்…
குழு : ஸ்வாமிக்கே…
ஆண் : நெய் அபிஷேகம்…
குழு : ஸ்வாமிக்கே…
ஆண் : மலர் அபிஷேகம்…
குழு : ஸ்வாமிக்கே…
ஆண் : தேன் அபிஷேகம்…
குழு : ஸ்வாமிக்கே…
ஆண் : சந்தன அபிஷேகம்…
குழு : ஸ்வாமிக்கே…
ஆண் : அவுலும் மலரும்…
குழு : ஸ்வாமிக்கே…
ஆண் : முத்திரை தேங்காய்…
குழு : ஸ்வாமிக்கே…
ஆண் : கற்பூர தீபம்…
குழு : ஸ்வாமிக்கே…
ஆண் : காணிப் பொன்னும்…
குழு : ஸ்வாமிக்கே…
ஆண் : எல்லாம் எல்லாம்…
குழு : ஸ்வாமிக்கே…
ஆண் : தன்னன்னாதினம் தன்னன்னாதினம்…
சரணம் ஐயப்பா…
குழு : சரணம் ஐயப்பா…
ஆண் : தன்னன்னாதினம் தன்னன்னாதினம்…
சரணம் ஐயப்பா…
குழு : சரணம் ஐயப்பா…
ஆண் : விழியாவும் ஒளியான குருவே என் சுவாமி…
உனைப் பாடும் உயிர் நாதம் சரணம் ஐயப்பா…
வழியாவும் துணையாக வருகின்ற சாஸ்தா…
மனமே உன் மலர்ப் பீடம் சரணம் ஐயப்பா…
ஆண் : சுத்தச்சுடர்மணியே…
குழு : ஐயப்பா…
ஆண் : பக்திப் பசுங்கனியே…
குழு : ஐயப்பா…
ஆண் : நித்தப் பௌர்ணமியே…
குழு : ஐயப்பா…
ஆண் : சித்தக்குளிர் பனியே…
குழு : ஐயப்பா…
குழு : சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பா…
சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பா…
ஆண் : தன்னன்னாதினம் தன்னன்னாதினம்…
சரணம் ஐயப்பா…
குழு : சரணம் ஐயப்பா…
ஆண் : தன்னன்னாதினம் தன்னன்னாதினம்…
சரணம் ஐயப்பா…
குழு : சரணம் ஐயப்பா…
—BGM—
ஆண் : ஆயிரம் கோடி சூரியன் கூடி…
சேர்கின்ற தேதி மகரமாஜோதி…
தீபத்தை தாங்கும் திரியினைப் போல…
ஐயனை சுமந்தேன் அன்பு நெஞ்சாலே…
ஆண் : மூலமும் என்ன நானறியேன்…
குழு : சுவாமி ஐயப்பா…
ஆண் : முடிவுகள் என்ன நானறியேன்…
குழு : சரணம் ஐயப்பா…
ஆண் : வாழ்கின்ற வாழ்வு ஒன்று மட்டும்…
ஐயப்பன் அருள் என நன்கறிவேன்…
அருள்விழி மலர்முகம்…
அது எந்தன் மனச்சுகம்…
இசையெனும் ஏழுஸ்வரம்…
எனக்கது புகழ்தரும்…
மணிகண்ட மந்திரம் உலகில் நிரந்தரம்…
குழு : சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா…
சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா…
ஆண் : தன்னன்னாதினம் தன்னன்னாதினம்…
சரணம் ஐயப்பா…
குழு : சரணம் ஐயப்பா…
ஆண் : தன்னன்னாதினம் தன்னன்னாதினம்…
சரணம் ஐயப்பா…
குழு : சரணம் ஐயப்பா…
—BGM—
ஆண் : ஹரிஹர சுதனே அருள்மிகு தவமே…
நர்த்தன நவமே வா வா…
குழு : சுவாமி பொன்னைய்யப்பா…
அய்யனே பொன்னையப்பா…
ஆண் : கனியுறு முகமே பிணியறு கரமே…
கலியுக வரமே வா வா…
குழு : சுவாமி பொன்னைய்யப்பா…
அய்யனே பொன்னையப்பா…
ஆண் : பக்தித்தாமரை முத்தித் தேன் துளி…
தித்திப்பாகியதே…
சித்ததால் அதன் பித்தத்தால்…
தினம் கத்திக்கூவியதே…
குழு : சுவாமி திந்தகத்தோம்…
ஐயப்ப திந்தகத்தோம்…
சுவாமி திந்தகத்தோம்…
ஐயப்ப திந்தகத்தோம்…
ஆண் : விண்ணில் இல்லாத வினையறு திருவே…
மண்ணில் உண்டான மணிகண்ட குருவே…
குழு : ஸ்வாமியேய் சரணம் ஐயப்பா…
ஆண் : செண்டை கொட்ட உடன் சிங்கி தட்ட…
அது அண்டம் தொட்டு பகிரண்ட முட்ட…
உந்தன் அன்பு மொட்டு விட…
துன்பம் விட்டுவிட…
எண்ணம் கட்டுப்பட…
இன்பம் வட்டமிட…
ஆண் : சிவ சிவ சைவமும் ஹரி ஹரி வைணமும்…
இரு இனம் வலம் வரும்…
அழகிய திருத்தலம்…
குழு : ஒரு மலையே குரு மலையே அறிவாய்…
அதை அறிந்தால் துயர் இல்லயே பொதுவாய்…
சிவன் மகனே திரு ஒளியாய் வருவாய்…
ஹரிசுதனே அனுதினமும் அருள்தருவாய்…
குழு : ஸ்வாமியேய் சரணம் ஐயப்பா…
ஸ்வாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா…
பந்தள ராஜா ஐயப்பா பம்பாவாசா ஐயப்பா…
ஆண் : ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே…
ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே…
ஸ்வாமியேய் சரணம் ஐயப்பா…
ஆண் : தன்னன்னாதினம் தன்னன்னாதினம்…
சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா…
Notes : Saranam Ayyappa Song Lyrics in Tamil. This Song from Pistha (1997). Song Lyrics penned by Kalidasan. சரணம் ஐயப்பா பாடல் வரிகள்.
The post சரணம் ஐயப்பா appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/fsVDOCm
0 Comments