பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | உன்னால் முடியும் தம்பி |
Punjai Undu Nanjai Undu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தந்தன் னானா தந்தன் னானா…
தந்தன் னானா தானா…
ஹோய்… தந்தன் னானா தந்தன் னானா…
தந்தன் னானா தந்தன் னானா…
ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…
பொங்கி வரும் கங்கை உண்டு…
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே…
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே…
ஆண் : வீதிக்கொரு கட்சி உண்டு…
சாதிக்கொரு சங்கம் உண்டு…
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே…
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே…
ஆண் : இது நாடா இல்லே வெறும் காடா…
இதக் கேக்க யாரும் இல்லே தோழா…
இது நாடா இல்லே வெறும் காடா…
இதக் கேக்க யாரும் இல்லே தோழா…
ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…
பொங்கி வரும் கங்கை உண்டு…
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே…
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே…
—BGM—
ஆண் : வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை…
யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது…
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ…
வீடின்றி வாசலின்றித் தவிக்குது…
ஆண் : எத்தனை காலம் இப்படிப் போகும்…
என்றொரு கேள்வி நாளை வரும்…
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்…
என்றிங்கு வாழும் வேளை வரும்…
ஆண் : ஆயிரம் கைகள் கூடட்டும்…
ஆனந்த ராகம் பாடட்டும்…
நாளைய காலம் நம்மோடு…
நிச்சயம் உண்டு போராடு…
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு…
ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…
பொங்கி வரும் கங்கை உண்டு…
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே…
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே…
—BGM—
ஆண் : ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது…
தானாகப் பாதை கண்டு நடக்குது…
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது…
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது…
ஆண் : எண்ணிய யாவும் கைகளில் சேரும்…
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே…
காலையில் தோன்றும் சூரியன் போலே…
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே…
ஆண் : சேரியில் தென்றல் வீசாதா…
ஏழையை வந்து தீண்டாதா…
கங்கையும் தெற்கே பாயாதா…
காவிரியோடு சேராதா…
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா…
ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…
பொங்கி வரும் கங்கை உண்டு…
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே…
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே…
ஆண் : இது நாடா இல்ல வெறும் காடா…
இத கேக்க யாரும் இல்லே தோழா…
இது நாடா இல்ல வெறும் காடா…
இத கேக்க யாரும் இல்லே தோழா…
Notes : Punjai Undu Nanjai Undu Song Lyrics in Tamil. This Song from Unnal Mudiyum Thambi (1988). Song Lyrics penned by Pulamaipithan. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பாடல் வரிகள்.
The post புஞ்சை உண்டு நஞ்சை உண்டு appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/7HwbX5q
0 Comments