செம்பருத்தி செம்பருத்தி https://ift.tt/kD0ObAe

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
வாலி எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி தேவா வசந்தகால பறவை

Semparuthi Semparuthi Song Lyrics in Tamil


ஆண் : கூப்பிட்டால் மலர் தேடி வண்டு வரும்…
தேதி குறிபிட்டால் கொய்யாவை கிளிகள் கொத்தும்…
சிந்தித்தால் வருகின்ற கவிதை போலே…
கண்கள் சந்தித்தால் வர வேண்டும் உண்மைக் காதல்…

BGM

ஆண் : செம்பருத்தி செம்பருத்தி…
பூவைப் போல பெண் ஒருத்தி…
காதலன தேடி வந்தால்…
கண்ணில் வண்ண மை எழுதி…

ஆண் : மேலும் கீழும் ஆடுகின்ற நூல் இடைதான்
மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம்தான்…
நாள் எல்லாம் மீண்டும் மீண்டும் நான் படிக்கும்…
நூலகம்தான்…

பெண் : செம்பருத்தி செம்பருத்தி…
பூவைப் போல பெண் ஒருத்தி…

BGM

ஆண் : பள்ளியறை நான்தானே…
பாரிஜாத பூந்தேனே…
கல்வி போல் காதலை கற்று தர வந்தேனே…

பெண் : கற்றுக் கொடு கண்ணாலே…
கன்னி மயில் உன்னாலே…
என்னவோ என்னவோ இன்பங்களை கண்டாளே…

ஆண் : பருவ கனவு பிறக்கும் பொழுது…
இறகு முளைத்துபறக்கும் மனது…

பெண் : உணர்ச்சி அலைகள் திரண்டு திரண்டு…
கரையை கடக்கும் நதிகள் இரண்டு…

ஆண் : இமைதானே கண்ணை சேர்ந்தது…
எந்தன் இள நெஞ்சம் உன்னை சேர்ந்தது…

ஆண் : செம்பருத்தி செம்பருத்தி…
பூவைப் போல பெண் ஒருத்தி…

BGM

பெண் : எப்பொழுதும் எந்நாளும்…
உன்னுடைய பூபாளம்…
இல்லையேல் ஏங்குமே என்னுடைய ஆகாயம்…

ஆண் : ஜன்னல் வழி நாள் தோறும்…
மின்னல் ஒன்று கை காட்டும்…
அம்மம்மா என்னைதான் ஆசைகளில் நீராட்டும்…

பெண் : எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்…
இளமை தொடங்கி முதுமை வரைக்கும்…

ஆண் : இரவும் பகலும் உறவை வளர்க்கும்…
இடையில் இருக்கும் தடையை தகர்க்கும்…

பெண் : விலகாது சொந்தமானது…
தெய்வம் முடி போட்ட பந்தம் ஆனது…

பெண் : செம்பருத்தி செம்பருத்தி…
பூவைப் போல பெண் ஒருத்தி…
காதலனை தேடி வந்தாள்…
கண்ணில் வண்ண மை எழுதி…

பெண் : மார்பின் மீது கண் மயங்கி சாய்ந்திடத்தான்…
மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான்…
கை தொடும் மேனி எங்கும் காவிரி போல்…
பாய்ந்திடத்தான்…

ஆண் : செம்பருத்தி செம்பருத்தி…
பூவைப் போல பெண் ஒருத்தி…


Notes : Semparuthi Semparuthi Song Lyrics in Tamil. This Song from Vasanthakala Paravai (1991). Song Lyrics penned by Vaali. செம்பருத்தி செம்பருத்தி பாடல் வரிகள்.


The post செம்பருத்தி செம்பருத்தி appeared first on Tamil Padal Varigal.from Tamil Padal Varigal https://ift.tt/42fH5uj

Post a Comment

0 Comments